நன்றி சொல்லுங்கள் ! – மரபின் மைந்தன் முத்தையா | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான்
Contact us to Add Your Business
நன்றி சொல்லுங்கள் !
செயல்படத் தூண்டும் சவால்களுக்கு,
சாதிக்கத் தூண்டும் பகைவர்களுக்கு,
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு,
சேமிக்கத் தூண்டும் நெருக்கடிகளுக்கு,
செய்தித்தாள் போடும் பையனுக்கு,
பூக்கள் விற்கும் சிறுமிக்கு,
பயணச்சீட்டு தரும் நடத்துநருக்கு,
தொலைதூர பேருந்துகளில் ஓட்டுநருக்கு,
கவனக்குறைவை உணர்த்தும் தோல்விகளுக்கு,
திருந்தத் தூண்டிய தவறுகளுக்கு,
வைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்கு,
பாராட்டும்படி வளரச்செய்த பரிகாசங்களுக்கு,
நன்றி சொல்லுங்கள் !
எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு,
எப்போதும் வழிகாட்டும் எழுத்துக்களுக்கு,
எப்போதும் சிரிக்கும் பூக்களுக்கு,
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு,
மரங்கள் நடும் கரங்களுக்கு,
முகம் சுளிக்காத செவிலியர்களுக்கு,
எதையும் எதிர்பார்க்காத கலைஞர்களுக்கு,
ஏச்சுக்கள் தாங்கும் பணியாளர்களுக்கு,
தொடக்கப்பள்ளி ஆசிரியர்க்கு,
ஓய்வு கொடுக்கும் இரவுக்கு,
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு,
புத்துணர்வு கொடுக்கும் விடியலுக்கு,
வாய்ப்புக்கள் கொடுக்கும் வாழ்க்கைக்கு
நன்றி சொல்லுங்கள் !
– மரபின் மைந்தன் முத்தையா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates