வயிற்று பிரச்சினை | புல்லாங்குழல் | கெட்டவன்| நாளும் பல நற்செய்திகள் செந்தமிழன் சீமான் 25-10-2023
Contact us to Add Your Business
நம்முடைய பிரச்சினையே வயிறுதான்; சிலருக்கு நிறைத்தாக வேண்டும்; சிலருக்கு குறைத்தாக வேண்டும்!
காற்றும் இசையாகும் வாசித்தால்; சொற்களும் கவிதையாகும் யோசித்தால்; உலகமே நட்பாகும் நேசித்தால்!
உண்மையான நல்ல மனிதர்களை ஏன் பார்க்க முடியவில்லை? எல்லோரும் அந்த வேசத்தைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட காலம் வாழவேண்டும் என்பது பலரின் ஆசை; ஆனால் பலருக்கும் பயன்படுமாறு வாழ நினைப்பவர் மிகச்சிலரே! .
‘புல்லாங்குழல்’ பழையதாக இருந்தாலும் அதிலிருந்து புதிய இசை நிச்சயமாகத் தோன்றும்; முதுமையும் அதுபோலத்தான்!
ஒருவன் கெட்டவன் என்று சொன்னால் உடனே நம்பிவிடுகிறார்கள்; ஆனால் நல்லவன் என்று சொன்னால் நிரூபிக்க வேண்டி இருக்கிறது!
கடைசியில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புங்கள்; சரியாகவில்லை என்றால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்!

