தி இந்து தமிழ் – முகப்புச் செய்திகள்
இந்து தமிழ் திசை RSS feed
- நான் யார் தெரியுமா? சிபிஐ, இண்டர்போல், வருமான வரித்துறை, பிரதமர் பாதுகாப்பு அதிகாரி: போலீஸாரை தலைச் சுற்றவைத்த நபர் கைது on February 5, 2019 at 1:36 pm
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் மோதலில் ஈடுபட்ட நபரை போலீஸார் காப்பாற்றச் சென்றபோது நான் யார் தெரியுமா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரி, இண்டர்போல் அதிகாரி என அடுக்கடுக்காக அடுக்கி போலீஸாரை அசரவைத்த போலி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். […]
- ஆண்டர்சனைக் கடந்து ரபாடாவைப் பிடிக்கும் தூரத்தில் பாட் கமின்ஸ்; ஹோல்டர் புதிய பாய்ச்சல்: ஐசிசி தரவரிசை on February 5, 2019 at 1:06 pm
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைக் கடந்து 2ம் இடம் சென்றுள்ளார். மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6ம் இடத்துக்குத் தாவியுள்ளார். […]
- ஆஸ்கரைப் பெறும்போது ஒல்லியாகத் தெரிய பட்டினி கிடந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் ருசிகரம் by பி.டி.ஐ on February 5, 2019 at 12:54 pm
ஆஸ்கர் விருதைப் பெறும்போது ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்தேன் என்று விருது வாங்கி 10 ஆண்டுகள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். […]
- தனுஷ் படத்தில் நடிக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் on February 5, 2019 at 12:35 pm
தனுஷின் ‘அசுரன்’ படத்தில் நடிக்க இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். […]
- ‘ஐரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மேகதூதம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ on February 5, 2019 at 12:32 pm
‘ஐரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மேகதூதம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ […]
- நட்சத்திர ஹோட்டலில் சூதாட்டக்காரர்களிடம் ரெய்டு: சிக்கிய பணத்தை கணக்கில் வைக்காத கிண்டி ஆய்வாளர்: ஆயுதப்படைக்கு மாற்றம் on February 5, 2019 at 12:23 pm
நட்சத்திர ஹோட்டலில் சோதனையிட்டு கிடைத்த சூதாட்ட பணத்தை பதுக்கி கொண்ட புகாரில் கிண்டி சட்டம்-ஒழுங்கு ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். […]
- விஜய்சேதுபதி ஒரு அரக்கன்: இயக்குநர் சேரன் புகழாரம் on February 5, 2019 at 12:22 pm
எக்ஸ்ப்ரஷன்களை அவ்வளவு கண்ட்ரோல் பண்ணி நடித்திருந்தார். இப்படத்தின் ஜானுவை இன்னொரு 20 வருஷத்துக்கு மறக்க மாட்டார்கள். […]
- டெல்லி பிரசாத் - விஜய் சேதுபதி இணையும் துக்ளக் on February 5, 2019 at 12:20 pm
'96' படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டவர் லலித்குமார். அவருடைய தயாரிப்பில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தினார். […]
- குல்தீப் யாதவ்தான் நம் நம்பர் 1 ஸ்பின்னர்: அஸ்வினைக் காட்டிலும் குல்தீப்பை விரும்பும் ரவி சாஸ்திரி on February 5, 2019 at 12:12 pm
குல்தீப் யாதவ் குறைந்த ஓவர்கள் போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் அயல்நாடுகளில் சிறப்பாக வீசுகிறார் எனவே அவர்தான் நமக்கு நம்பர் 1 ஸ்பின்னர் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். […]
- பழைய துணிகளும், மரக்கன்றுகளும்: மணமக்களின் நூதன திருமணப் பரிசு on February 5, 2019 at 12:05 pm
பழைய ஆடைகளைத் திருமணப் பரிசாகக் கொண்டு வரும் விருந்தினர்களுக்கு அசாமைச் சேர்ந்த மணமக்கள் மரக்கன்றுகளை வழங்கி அசத்தியுள்ளனர். […]
- ‘தேவ்’ காதல் கதை மட்டுமல்ல: கார்த்தி on February 5, 2019 at 11:58 am
‘தேவ்’ படம் காதலை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்படவில்லை என கார்த்தி தெரிவித்தார். […]
- பாஜக - மம்தா அடுத்த மோதல்: ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு: காரில் சென்று ஆதித்யநாத் உரை on February 5, 2019 at 11:58 am
மேற்குவங்கத்தில் இன்று நடைபெறும் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மம்தா பானர்ஜி அனுமதி மறுத்து விட்டார். இதையடுத்து காரில் சென்ற யோகி ஆதித்யநாத் அங்கு உரையாற்றி வருகிறார். […]
- தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி வரும் 8-ம் தேதி பொறுப்பேற்பு on February 5, 2019 at 11:53 am
தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி, வரும் 8-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்க உள்ளார். […]
- கீழடி அகழ்வாராய்ச்சி: தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பெருமை வராமல் பாஜக அரசு பார்த்துக்கொள்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு on February 5, 2019 at 11:52 am
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பேசிய ஸ்டாலின் “தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எந்த வகையிலும் பெருமை வந்துவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது, என குற்றம் சாட்டியுள்ளார். &nbs […]
- காங்கிரஸிலேயே இருந்து முன்பை விட வேகமாக செயல்படுவேன் -திருநாவுக்கரசர் சிறப்பு பேட்டி by ஆர்.ஷபிமுன்னா on February 5, 2019 at 11:25 am
காங்கிரஸிலேயே இருந்து முன்பைவிட வேகமாக செயல்படுவேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிய இழந்த அவர் டெல்லியில் ராகுல் காந்திய நேற்று சந்தித்தார். […]
- உலக சுற்றுலாவுக்காக நிதி திரட்ட 4 மாதக் குழந்தையை ஆபத்தான முறையில் தூக்கி வீசி சாகசம் செய்த கொடூரம்: தம்பதி கைது by ஏ.எப்.பி. on February 5, 2019 at 11:25 am
உலகச் சுற்றுலா செல்வதற்காக நிதி திரட்டும்பொருட்டு, தங்களின் 4 மாதப் பெண் குழந்தையை ஆபத்தான முறையில் தூக்கி வீசி சாசகம் செய்த ரஷ்யத் தம்பதி மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
- புத்தகம் அறிவோம் 18 - 'சிலைத் திருடன்' on February 5, 2019 at 11:20 am
Puthagam Arivom Epi 18 | Silai Thirudan | சிலைத் திருடன் | Hindu Tamil Thisa […]
- இந்தியாவில் 24 மணி நேரம்: ‘திகில்’ அனுபவத்தினால் வெளியேறிய பெல்ஜியம் பெண் by ஹேமானி பந்தாரி on February 5, 2019 at 11:16 am
அதிதி தேவோ பவ.. விருந்தினர் கடவுளுக்கு நிகர் எனக் கொண்டாடும் நம் தேசத்தில்தான் இப்படியும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. […]
- 96 திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் கோவிந்த் வசந்தாவின் உருக வைக்கும் இசை on February 5, 2019 at 11:02 am
Govind Vasantha Live Performance in 96 Movie 100th Day Celebration | Hindu Tamil Thisai | […]
- 'மே.வங்கத்தில் நடப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்': பாஜக மீது சிவசேனா சாடல் by பி.டி.ஐ on February 5, 2019 at 10:57 am
மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்கள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகும். மக்களவைத் தேர்தலை வைத்து, அரசியல் லாபத்துக்காகத் தொடர்ச்சியாக சில நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றன என்று பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளது சிவசேனா கட்சி […]
- பருவ நிலை மாற்றம்: இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் - எச்சரிக்கும் புதிய அறிக்கை on February 5, 2019 at 10:50 am
பருவநிலை மாற்றம் காரணமாக 21-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் என்று சமீபத்தில் வந்த அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. […]
- ரூ.1 கோடி வைர நகைகள் கொள்ளை: வேலைபார்க்கும் கடையிலேயே கைவரிசை: விற்பனை நிர்வாகி கைது on February 5, 2019 at 10:50 am
ஐதராபாத்தில் பிரபல நகைக்கடையில் வேலைசெய்துவந்த விற்பனை நிர்வாகி ஒருவர் ரூ.1 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகளை அவ்வப்போது திருடிச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]
- உங்கள் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை: பாராட்டிய ராகுலின் மீது கட்கரி காட்டம் on February 5, 2019 at 10:43 am
பாஜகவில் கொஞ்சம் துணிச்சல் உள்ளவர் கட்கரி மட்டும்தான் என்று ராகுல் கூறியதற்கு, உங்களின் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை என நிதின் கட்கரி காட்டமாகத் தெரிவித்துள்ளார். […]
- காங்கிரஸை போல் பிற கட்சிகளும் திருநங்கைகளுக்கு இடம் தர வேண்டும்: அப்சரா அறிவுறுத்தல் by செ.ஞானபிரகாஷ் on February 5, 2019 at 10:41 am
திருநங்கைகளும் அரசியலுக்கு வரவேண்டும். பிற கட்சிகளும் காங்கிரசைப்போல் திருநங்கைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலர் அப்சராஅறிவுறுத்தினார். […]
- அண்ணா நகரில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை: நூறு சவரன் நகை, லட்சக்கணக்கில் பணம் திருட்டு on February 5, 2019 at 10:36 am
அண்ணா நகர் காவல் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கொள்ளையர்கள் வீடுகள், நிறுவனங்களின் பூட்டை உடைத்து நூறு சவரனுக்கு மேற்பட்ட நகைகள், லட்சக்கணக்கான ரொக்கப்பணம், வெளிநாட்டு மதுபானம், சிசிடிவி கேமரா, பதிவு கருவிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். […]
- மத்தியப் பிரதேசத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க புதிய முயற்சி: முதல்வர் கமல்நாத் அதிரடி by பி.டி.ஐ on February 5, 2019 at 10:11 am
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கும் வகையில், அனைத்துத் தொழிற்சாலைகளும் 70 சதவீதம், உள்மாநில மக்களையே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். […]
- யாரோ நம் மீது கல்லை வீசுவது போல் இருக்கும்: டென்னிஸ் பந்து-லெதர் பந்து வித்தியாசம் பற்றி ஷிகர் தவண் by பிடிஐ on February 5, 2019 at 9:55 am
தனது உத்தியை அச்சுறுத்தும் பந்தின் பவுன்சை எதிர்கொள்ள டென்னிஸ் பந்தில் பயிற்சி பெற்று வரும் ஷிகர் தவண் முதல் டி20 போட்டி புதனன்று நடைபெறவுள்ள நிலையில் ரிஷப் பந்த் இந்திய அணியின் சொத்தாகி வருகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். […]
- ‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல்? on February 5, 2019 at 9:50 am
‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]
- இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார் விஜய்சேதுபதி: திருமுருகன் காந்தி புகழாரம் on February 5, 2019 at 9:42 am
இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார் விஜய்சேதுபதி என்று '96' படத்தின் 100-வது நாள் விழாவில் திருமுருகன்காந்தி புகழாரம் சூட்டினார் […]
- சனி பகவான் ஸ்தல திருக்கோயிலில் வரும்11-ம் தேதி குடமுழுக்கு: காரைக்காலில் உள்ளூர் விடுமுறை by செ.ஞானபிரகாஷ் on February 5, 2019 at 9:42 am
வரும் 11-ம் தேதி சனி பகவான் ஸ்தலமான ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நடப்பதால் அன்றைய தினம் காரைக்காலுக்கு உள்ளூர் விடுமுறை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். […]
- வேறுசாதியைச் சேர்ந்தவரை காதலித்த மகளைக் கொன்ற தந்தை: ஆந்திராவில் கொடூரம் on February 5, 2019 at 9:27 am
ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்த தனது கல்லூரி நண்பரைக் காதலித்ததால், பெற்ற மகளை தந்தையை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. […]
- நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி?- புள்ளி விவரங்களுடன் சுவாரஸ்ய தகவல்கள் by நெல்லை ஜெனா on February 5, 2019 at 9:24 am
2014-ம் ஆண்டு முதல் மத்தியில் பதவியில் இருந்து வரும் பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 39 எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. […]
- புர்கினா பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதல்: பொது மக்கள் 14 பேர் பலி on February 5, 2019 at 9:17 am
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் தீவிரவதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். […]
- எங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல - திருமுருகன் காந்தி on February 5, 2019 at 9:15 am
எங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல - திருமுருகன் காந்தி […]
- திருமுருகன் காந்திக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்சேதுபதி on February 5, 2019 at 9:09 am
'96' படத்தில் 100-வது நாள் விழாவில் திருமுருகன் காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார் விஜய்சேதுபதி […]
- பத்திரிகையாளர்கள் கோபம்: வருத்தம் தெரிவித்த '96' இயக்குநர் on February 5, 2019 at 9:09 am
பத்திரிகையாளர் கோபமடைந்ததால், ’96’ படத்தின் 100-வது நாள் நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குநர் பிரேம்குமார் […]
- ’துப்பறிவாளன்’ விஷால் ‘தமிழ் ராக்கர்ஸை’ கண்டுபிடிக்கட்டும்; இயக்குநர் வசந்தபாலன் ஆதங்கம் by வி.ராம்ஜி on February 5, 2019 at 9:08 am
துப்பறிவாளனாக இருக்கிற விஷால், இரும்புத்திரை கொண்டு அடக்கி நடித்துள்ள விஷால், முதலில் தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிக்கட்டும். அதற்காகத்தானே பதவிக்கு வந்தார் என்று இயக்குநர் வசந்தபாலன் பேசினார். […]
- ‘‘தீயின் புயலைப் போன்ற பேஸ்புக் நேர்மறையான சக்தி’’ - ஜூக்கர் பெர்க் பெருமிதம் on February 5, 2019 at 9:07 am
சிக்கலான சமூக வலைப்பின்னலில் பேஸ்புக் சமுதாயத்திற்கான பரந்துபட்ட ஒரு நேர்மறையான சக்தியாக திகழ்வதாக 15வது ஆண்டுநிறைவு விழாவில் மார்க் ஜூக்கர் பெர்க் பெருமிதம் தெரிவித்துள்ளார். […]
- சிவகங்கையில் பள்ளி சிறார்களைக் கண்டு உற்சாகமான ஸ்டாலின்: காரை நிறுத்தி கைகுலுக்கி வாழ்த்து on February 5, 2019 at 8:47 am
சிவகங்கை கீழடி நோக்கி காரில் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் வருவதி அறிந்து பள்ளி மாணவர்கள் திரண்டு நின்று வாழ்த்து கோஷமிட உற்சாகமான ஸ்டாலின் காரை நிறுத்தி அவர்களுடன் கைகுலுக்கிவிட்டுச் சென்றார். […]
- தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை: தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நனவாகியது; அன்புமணி மகிழ்ச்சி on February 5, 2019 at 8:46 am
தருமபுரி - மொரப்பூர் ரயில்பாதைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதற்கு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். […]
- ஓவியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ் on February 5, 2019 at 8:44 am
ஓவியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ் […]
- செருப்புடன் ஒரு செல்ஃபி!- குவியும் பாராட்டு; புகைப்படக்காரரைத் தேடுகிறது பாலிவுட் by ஏஎன்ஐ on February 5, 2019 at 8:43 am
ஒரு சிறுவன் தன் கையில் செருப்பை மாட்டிக் கொண்டு அதை செல்ஃபோனாக பாவித்து செல்ஃபி எடுக்க முயல பின்னால் ஐந்தாறு சிறுவர்கள் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் ஃபோட்டோ ஒன்று படு வேகமாக வைரலாகி வருகிறது. […]
- 'பெண்களின் கைகளை வெட்டவேண்டும்'- சபரிமலை குறித்து சர்ச்சையாகப் பேசிய கொல்லம் துளசி கைது on February 5, 2019 at 8:42 am
சபரிமலைக்குள் பெண்கள் செல்வது குறித்து சர்ச்சையாகப் பேசிய கொல்லம் துளசி, கொல்லத்தில் இன்று கைது செய்யப்பட்டார். […]
- ஆட்டோ சுந்தர்: 17 ஆண்டுகளில் 1100 இலவச சவாரி; தந்தை வழியில் செல்லும் தனயன் by சுமித் பட்டாச்சார்ஜி on February 5, 2019 at 8:40 am
பிரசவத்துக்கு இலவசம்.. என்ற வாக்கியத்தை கொள்கையாகவே கடைபிடிக்கும் ஆட்டோக்காரர் இவர். […]
- ‘96’ படத்தின் நூறாவது நாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் on February 5, 2019 at 8:33 am
‘96’ படத்தின் நூறாவது நாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் […]
- 'ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி; மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்': பாஜக கட்சி தலைவர் விஜய் வர்ஜியா ஆவேசம் by ஐ.ஏ.என்.எஸ் on February 5, 2019 at 8:18 am
சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. உடனடியாக மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா வலியுறுத்தியுள்ளார். […]
- "ஆஸ்கர் வென்ற பின்னும் அப்பா மாறவில்லை" - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் நெகிழ்ச்சி by ஐ.ஏ.என்.எஸ் on February 5, 2019 at 8:05 am
உங்கள் மீது அளவுக்கதிகமான அன்பும் மரியாதையும் இருக்கக் காரணம் நீங்கள் எங்களுக்கு கற்பித்த நன்மதிப்புகள் தான். […]
- 'உச்ச நீதிமன்ற உத்தரவு என்னுடைய வெற்றி அல்ல, தேசத்துடையது': முதல்வர் மம்தா பானர்ஜி by பி.டி.ஐ on February 5, 2019 at 7:39 am
கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிரான எந்த கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது, கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டு இருப்பது எனக்குக் கிடைத்த வெற்றி அல்ல, தேசத்துக்குக் கிடைத்ததாகும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். […]
- கார்த்தியுடன் இன்னும் பல படங்களில் பணியாற்ற விரும்புகிறேன்: ரகுல் ப்ரீத்சிங் on February 5, 2019 at 7:36 am
கார்த்தியுடன் இணைந்து இன்னும் பல படங்களில் பணியாற்ற விரும்புகிறேன் என நடிகை ரகுல் ப்ரீத்சிங் தெரிவித்துள்ளார். […]
- பாலாற்றில் மேலும் 30 தடுப்பணைகள்: ஆந்திராவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்; ராமதாஸ் on February 5, 2019 at 7:36 am
பாலாற்றின் குறுக்கே புதிதாக 30 தடுப்பணைகளைக் கட்ட திட்டமிடும் ஆந்திர அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். […]